ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றவியல் விசாரணைப் பணியகத்தால் கைது.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம் இன்று (10) முற்பகல் மத்திய குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
காவல்துறை மா அதிபர் தொடர்பில் அவர் தெரிவித்ததாக கூறப்படும் கருத்து ஒன்று குறித்து விசாரணை நடத்துவதற்காகவே அவர் மத்திய குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, குறித்த விசாரணைக்காக அவர் இன்று இவ்வாறு மத்திய குற்ற விசாரணைப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.
சமீபத்தில் காவல்துறை மா அதிபர் குறித்து வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக, காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய மத்திய குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
