டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு!

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக்கிடந்த இலங்கையின் முதலாவது உத்தியோகபூர்வ "டிஜிட்டல் அடையாள அட்டை" இந்த ஆண்டிற்குள் வெளியிடப்படவுள்ளதுடன், 2027 ஓகஸ்ட் மாதத்திற்குள் நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரந்த வெலியங்கே, நீண்டகாலமாக தாமதிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தினார்.

அரசாங்கத் தரவுகளை ஒருங்கிணைக்கும் தேசிய தரவுப் பரிமாற்றம் மற்றும் மக்களின் சேவைகளுக்கான supiri App செயலி ஆகியவற்றுடன் இணைந்து இந்த டிஜிட்டல் அடையாள அட்டை தொழிற்படும்.

அத்துடன், டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் இணையக் கவரேஜை 98 சதவீதமாக உயர்த்த 600 முதல் 800 புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Post a Comment