இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார, கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இணைய மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் இந்த அணியில் இணையவுள்ளார்.
மற்றொருபுறம், இங்கிலாந்தில் ஹாம்ப்ஷயர் அணிக்காக சிவப்பு பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருந்த இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகேவின் முயற்சி கைநழுவிப் போயுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அவருக்கு NOC வழங்க மறுத்ததே இதற்கு முக்கிய காரணம்.
2026–27 சீசனுக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வெல்லாலகேவுக்கு ஏன் NOC மறுக்கப்பட்டது என்பதற்கான தெளிவான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
