அனுராதபுரம், கொரகஹவெவ காப்புக்காட்டுப் பகுதியில் இன்று (28) காலை கணவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு 59 வயதுடைய பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் கூற்றுப்படி, சந்தேகநபரான கணவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ஆள் நடமாற்றம் மற்ற ப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதுடன், அதே ஆயுதத்தைப் பயன்படுத்தி தானும் உயிரை மாய்க்க முயன்று படுகாயமடைந்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்த பெண் உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த கணவர் பலத்த காயங்களுடன் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
