இந்த வருடம் இதுவரை 92,011 டெங்கு நோயாளர்கள் 68 பேர் உயிரிழப்பு

 

இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையும் 68 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் 96 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தற்போது அதிக ஆபத்து உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த வருடம் பதிவான நோயாளர்களில் 52.96 சதவீதமான 48 ஆயிரத்து 725 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். இதனால் அதிக டெங்கு அபாயம் உள்ள மாகாணமாக மேல் மாகாணம் மாறியுள்ளது.

அடுத்ததாக தென் மாகாணத்தில் 13 ஆயிரத்து 533 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8 ஆயிரத்து 274 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7 ஆயிரத்து 558 பேரும் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியில் பார்தால் கொழும்பில் 18 ஆயிரத்து 245 பேரும், கண்டியில் 6 ஆயிரத்து 613 பேரும், மாத்தறையில் 6 ஆயிரத்து 36 பேரும், களுத்துறையில் 5 ஆயிரத்து 951 பேரும், காலியில் 5 ஆயிரத்து 39 பேரும், இரத்தினபுரியில் 4 ஆயிரத்து 935 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் ஜூலை மாதத்திலேயே அதிகமாக 29 ஆயிரத்து 968 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகுதியான வைத்தியரிடம் சிகிச்சை பெறுமாறு சுகாதார துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.


Post a Comment