மேட்டுப்பாளையம் அருகே நிறுத்திய காரில் சிக்கி 9 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் விளையாடிய 9 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சிறுமுகையை சேர்ந்த வேலுமணி என்பவரின் மகன் முகுந்த் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி ஆசிரியர் மணிவண்ணனின் காரில் சாவியை எடுத்து விளையாட சென்றுள்ளார்

அப்போது காரின் கதவுகள் தானாக பூட்டிக்கொண்டதால் சிறுவனால் வெளியே வர முடியவில்லை நீண்ட நேரம் உள்ளேயே இருந்ததால் மூச்சுத்திணறி மயக்கமடைந்துள்ளார்

நேற்று மாலை காரை எடுக்க வந்த ஆசிரியர் மணிவண்ணன் காருக்குள் சிறுவன் மயங்கி கிடப்பதை கண்டு மீட்டு முதலில் சிறுமுகை தனியார் மருத்துவமனைக்கும் பின்னர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றார்

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்

இது தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் கார் கதவு திறந்தே இருந்ததா அல்லது சிறுவன் எப்படி உள்ளே சென்றான் என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்



Post a Comment