மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் சேதம்

மேற்கு கொலம்பியாவில் நேற்று 10 ஆம் திகதி 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது

நாட்டின் பல நகரங்களில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டன

இந்த நிலநடுக்கத்தின் மையம் சாஃகோ திணைக்களத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மரில் போகொடாவுக்கு மேற்கே சுமார் 280 கிலோமீட்டர் தொலைவில் 107 கிலோமீற்றர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணி 34 நிமிடத்திற்கு பதிவானது

சாஃகோ பிராந்தியத்தின் ஆளுநர் நுபியா கரோலினா கோர்டோபா கூரி பிராந்திய தலைநகரான கிப்டோவில் காயங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்தினார்

மேலும் நிலநடுக்கத்திற்கு பிந்தைய தொடர் அதிர்வுகள் குறித்து கவலை தெரிவித்தார்

நாட்டின் தலைநகரான போகொடாவில் அதிர்வு பலமாக உணரப்பட்டது எச்சரிக்கை மணிகள் ஒலிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கட்டிடங்களை விட்டு வீதிகளுக்கு வெளியேறினர்

தற்போது வரை காயங்களோ அல்லது பெரிய அளவிலான கட்டமைப்பு சேதங்களோ பதிவாகவில்லை சில கட்டிடங்களில் சிறிய விரிசல்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன என்று போகொடா மேயர் கார்ட்லோஸ் கெலன் தெரிவித்துள்ளார்

புதிய இணைப்பு

கொலம்பியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

இதுவரை அதிகாரப்பூர்வமாக குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 87 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன



Post a Comment