இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் இன்று பிற்பகல் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான இது ஒரே நாளில் அந்த நாட்டை தாக்கிய இரண்டாவது பெரிய நிலநடுக்கமாகும்.
சுமாத்திராவின் மேடான் நகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 126 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பெமடாங்சியந்தார் பகுதியில், பூமிக்கு அடியில் 183 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இதற்கு முன்னதாக நேற்று பதிவான 7.7 ரிக்டர் அளவிலான முதலாவது நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்திருந்தனர். அதன் சில மணி நேரங்களிலேயே இந்த இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
