இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் இன்று அம்பர் எனப்படும் செம்மஞ்சள் மட்டத்திலான வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கையின்படி, பகல் நேரங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை சில பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, போதுமான அளவு நீர் அருந்துதல்,கடினமான வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளுதல் ,நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்த்தல்
போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
