54000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்
சீனாவின் தெற்குப் பகுதியில் 'நாரா' (யேசசய) சூறாவளியால் ஏற்பட்ட பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் வீடுகள் மற்றும் கடைகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், மற்றொரு சூறாவளிப் புயலான 'சௌடெல்' (ளுயரனநட) ஜப்பான் மற்றும் தைநாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது.
சீனாவின் குவாங்ஷி மாகாணம் சோங்சுவோ பகுதியில் அங்கு 15,000-க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர். ஸ
ஒட்டுமொத்தமாக குவாங்ஷி பகுதியில் 54,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பீபு வளைகுடா (புரடக ழக வுழமெin) பகுதியில் மையம் கொண்டிருந்த நாரா புயல், குவாங்ஷி, ஹைனான் மற்றும் குவாங்டாங் மாகாணங்களில் கனமழையைக் கொட்டி தீர்த்தது.
வியட்நாம் மற்றும் சீனாவின் சில பகுதிகளில் (குவாங்ஷி, குவாங்டாங், ஹைனான், மற்றும் புஜியான்) புதன்கிழமை வரை பலத்த மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோங்சுவோவில் உள்ள அனைத்து வணிக மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மிதமான வலிமை கொண்ட 'சௌடெல்' புயல் ஜப்பானின் தெற்குப் பகுதி மற்றும் ஒகிநாவா தீவுகளை நோக்கி நகர்கிறது.
அங்கு கடுமையான காற்று மற்றும் கடல் சீற்றம் இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
