ராஜஸ்தான் விவசாயியின் 5 லட்சம் ரூபா பணம் கரையானால் நாசம் மனைவிக்கு தெரியாமல் புதைத்து வைத்தது கண்ணீரில் முடிந்தது

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டம் பச்பத்ரா பகுதியை சேர்ந்த விவசாயி மங்கிலால் மேக்வால் மனைவிக்கு தெரியாமல் நிலத்தில் புதைத்து வைத்த 5 லட்சம் ரூபா பணத்தை கரையான் அரித்ததால் பெரும் அதிர்சி அடைந்துள்ளார்

கடந்த ஆண்டு தனது நிலத்தை 5 லட்சம் ரூபாவிற்கு விற்ற மங்கிலால் அந்த பணத்தில் வீட்டில் ஒரு அறை கட்ட திட்டமிட்டுள்ளார் இதனால் பணத்தை பாலிதீன் கவரில் வைத்து 6 ஏக்கர் நிலத்தில் ஒரு இடத்தில் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார் குடிப்பழக்கம் இருந்ததால் பணத்தை புதைத்த இடம் அவருக்கு நினைவில் இல்லாமல் போய்விட்டது

பின்னர் அறை கட்ட பணம் தேவைப்பட்டபோது நிலத்தை முழுவதுமாக தோண்டி தேடியும் பணம் கிடைக்கவில்லை ஆரம்பத்தில் நம்பாத மனைவியும் மகனும் பின்னர் அவருடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர் ஒரு ஆண்டாக தேடியும் பலனில்லாமல் போனது

இந்த நிலையில் மழைக்கு பின் விவசாயத்திற்காக டிராக்டர் வைத்து நிலத்தை உழுதபோது மண்ணுக்குள் இருந்த 500 ரூபா நோட்டுகள் வெளியே வந்துள்ளன ஆனால் அனைத்து நோட்டுகளையும் கரையான் அரித்து சேதப்படுத்தியிருந்தது இதனை கண்ட குடும்பமே அதிர்சியில் உறைந்தது

சேதமடைந்த பணத்தை மாற்றுவதற்காக பச்பத்ரா வங்கிக்கு எடுத்து சென்றபோது வங்கி நிர்வாகம் அதனை ஏற்க மறுத்து ஜெய்ப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளது

கரையான் அரித்த பணத்தை கையில் வைத்துக்கொண்டு மங்கிலால் கண்ணீர் விட்டு அழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்த காட்சியை பார்த்த பலரும் விவசாயியின் நிலையை நினைத்து வேதனை தெரிவித்து வருகின்றனர்



Post a Comment