பெங்களூரு 5 நட்சத்திர விடுதியில் 2 குழந்தைகள் கொலை தந்தை தற்கொலை முயற்சி

 

பெங்களூருவில் உள்ள 5 நட்சத்திர விடுதி ஒன்றில் இரு குழந்தைகள் சடலமாகவும் அவர்களின் தந்தை படுகாயங்களுடனும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது

40 வயதான இம்ரான் மற்றும் அவரது இரு மகள்கள் விடுதி அறையில் தங்கியிருந்தனர் விடுதி ஊழியர்கள் அறைக்கு சென்று பார்தபோது குழந்தைகள் கட்டிலில் சடலமாக கிடந்தனர்

இம்ரான் கழுத்து அறுபட்ட நிலையில் கழிப்பறையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

விசாரணையில் இம்ரான் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது

என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர்வதை விரும்பவில்லை அதனால்தான் அவர்களை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்ய முடிவு செய்தேன் என இம்ரான் பொலிசாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது

இம்ரான் தன் மகள்களின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக பொலிசார் கூறியுள்ளனர்

இது தொடர்பில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இம்ரான் பெங்களூரு நாகவாரா பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன



Post a Comment