2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது.
எத்தனை பேர் எழுதினார்கள்?
இன்று *09.08.2026* நாடு முழுவதும் *2,723 பரீட்சை நிலையங்களில்* இப்பரீட்சை நடைபெற்றது.
இதற்கு தோற்ற தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை *2,94,089* ஆகும்.
*எப்போது பெறுபேறு?*
பெறுபேறுகளை *ஒரு மாத காலத்திற்குள்* வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக *பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க குமாரி லியனகே* தெரிவித்துள்ளார்.
*நாளை GCE உயர்தரம் ஆரம்பம்*
இதேவேளை, *G.C.E உயர்தரப் பரீட்சை* நாளை *10.08.2026* ஆரம்பமாகி *செப்டம்பர் 5ஆம் திகதி* வரை நடைபெறவுள்ளது.
இந்த பரீட்சை நாடளாவிய ரீதியில் *2,532 நிலையங்களில்* நடைபெறவுள்ளது. இம்முறை மொத்தம் *3,72,310 பரீட்சார்திகள்* தோற்றவுள்ளனர்.
*முக்கிய அறிவித்தல்*
பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு செல்வதற்கு முன்னர் *அனுமதி அட்டையில் தவறாமல் கையொப்பம் சான்றளிக்கப்பட வேண்டும்* என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
பரீட்சை எழுதிய அனைத்து பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்!
