நான்காவது குழந்தை பிறக்கவுள்ள நிலையில் மகப்பேறு விடுப்பு கோரி இந்திய அரச பெண் ஊழியர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உத்தரபிரதேச மாநில அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது
சி குமாரி என்ற அரச ஊழியர் தாக்கல் செய்த இந்த மனுவை நீதிபதி மஞ்சு ராணி சவுகான் விசாரித்து உத்தரவு பிறப்பித்தார்
தனது நான்காவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு கோரிக்கையை சம்பல் பிராந்திய கல்வி அதிகாரி நிராகரித்ததை எதிர்து குறித்த பெண் நீதிமன்றத்தை நாடியிருந்தார் சட்டப்படி தனக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்
விசாரணையின் போது அரசாங்க தரப்பு சட்டத்தரணி தற்போதுள்ள விதிகளின்படி நான்காவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு பெறுவதற்கு உரிமை இல்லை என வாதிட்டார்
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு தனது முந்தைய மூன்று குழந்தைகள் பிறக்கும் போதும் மகப்பேறு விடுப்பு பெறவில்லை எனவும் தற்போதுதான் முதல் முறையாக விடுப்பு கோருவதாகவும் தெரிவித்தது
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுதாரர் ஏற்கனவே மகப்பேறு விடுப்பு பெற்றுள்ளதற்கான ஆதாரங்களை அரசு தரப்பு சமர்பித்துள்ளதால் இந்த விடயத்தில் நீதிமன்றம் தலையிட தேவையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
