சுயேட்ச்சை நாடாளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்; உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி, தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் மாதாந்த சம்பளக் கூற்றை வெளியிட்டுள்ளார்.
தனது எரிபொருள் கொடுப்பனவு ரூ. 179,000 இல் இருந்து ரூ. 244,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிதி அதிகரிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவ்வாறான தொகைப் பெருக்கம் செய்யப்பட்டு பெலவத்தையில் உள்ள கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
'உண்மையைக் கூறுபவர்களை மூச்சுத்திணற வைத்துவிட்டுத் தொடர்ந்து கைதட்டுங்கள்' எனத் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் ரூ. 60,000 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றியிருந்தார்.
இதற்கமைய, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் புதிய மாதாந்த சம்பளம் ரூ. 484,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
