மாஓயாவில் நீராட சென்ற 3 இளைஞர்கள் ஒருவர் பலி ஒருவர் காணவில்லை

 

மீரிகம மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராட சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவரை காணவில்லை.

நேற்று பிற்பகல் மாஓயாவில் நீராட சென்ற மூவரும் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் இரண்டு பேரை உடனடியாக மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மீரிகம பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீரில் மூழ்கி காணாமல் போன இன்னொரு இளைஞரை தேடும் பணிகள் தொடர்கின்றன. மீரிகம பொலிஸார், பொலிஸ் உயிர் காப்பு பிரிவினர் மற்றும் ஊர் மக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Post a Comment