வடக்கு, கிழக்கு பகுதிகளில் கொளுத்தும் வெயில்! 37.2°C ஆக பதிவு – எச்சரிக்கை தகவல்

இலங்கையின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது அதிக வெப்பநிலையுடனான வானிலை நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் உருவாகி வரும் El Niño தாக்கம் காரணமாக, பல பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பமும், வறட்சியான வானிலையும் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, பொலன்னறுவையில் 37.2°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதனிடையே, நாட்டின் பல பகுதிகளில் நீடித்து வரும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்வளங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக அதிக வெப்பநிலை நிலவும் பகுதிகளில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும், El Niño தாக்கம் எதிர்வரும் மாதங்களில் இலங்கையின் வானிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment