30 வருடங்களாக தோழிகளாக பழகிய இருவர் சகோதரிகள் என தெரியவந்த நெகிழ்ச்சி சம்பவம்

 

30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்துக்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா மற்றும் மினல் என்ற இரண்டு பெண்கள் கடந்த 30 ஆண்டுகளாக தாங்கள் சகோதரிகள் என தெரியாமலேயே தோழிகளாக பழகி வந்துள்ளனர்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ சோதனையில் இவர்கள் இருவரும் சகோதரிகள் என்றும் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து தத்து கொடுக்கப்பட்டவர்கள் என்றும் உறுதியாகியுள்ளது.

இந்த உண்மை தெரிந்ததும் இரு தோழிகளும் கட்டியணைத்து கண்ணீர் மல்க தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நாங்கள் இருவரும் முப்பது ஆண்டுகளாகவே சகோதரிகளாக இருந்துள்ளோம் ஆனால் அது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது என உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

தற்போது இவர்கள் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Post a Comment