எதிர்வரும் 2 மாதங்களுக்கு வடக்கு, கிழக்கில் வறட்சி எச்சரிக்கை - வெப்பம் அதிகரிக்கும்

அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாட்டின் சில பகுதிகளில் *வறட்சியான வானிலை* நிலவும் என *வளிமண்டலவியல் திணைக்களம்* எச்சரிக்கை விடுத்துள்ளது.

*எந்தெந்த பகுதிகள்?*  

*வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்* மழை குறைவாக இருக்கும் எனவும், *காற்றின் வேகம் குறைவடைவதால் உடலால் உணரும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்* எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

*நீர்த்தேக்கங்கள் வற்றின*  

தற்போது நிலவும் வறட்சி காரணமாக *அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை* மாவட்டங்களில் உள்ள பல நீர்த்தேக்கங்கள் வற்றிப்போயுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

*இன்று பதிவான வெப்பம்*  

இன்று காலை 6.00 மணியளவிலேயே பல பகுதிகளில் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது.  

*யாழ்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில்* ஆகிய பகுதிகளில் *29° செல்சியஸை* விட அதிகமான வெப்பநிலை பதிவானது.

*மக்களுக்கான அறிவுறுத்தல்கள்*  

1. தேவையற்ற நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்கவும்  

2. நிறைய தண்ணீர் குடித்து நீர்ச்சத்தை பேணவும்  

3. நீரை சிக்கனமாக பயன்படுத்தவும்  

4. விவசாயிகள் நீர் பாவனையை திட்டமிட்டு மேற்கொள்ளவும்


வறட்சி மற்றும் அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு சுகாதார துறையும் கேட்டுக்கொண்டுள்ளது.





Post a Comment