கிசுகிசு விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய மூதாட்டி இணையவாசிகள் ஷாக்

கொலம்பியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் மற்றவர்களின் ரகசியங்களை விற்று கிடைத்த பணத்தில் இரண்டு வீடுகளை வாங்கிய சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மிர்யம் என்று அழைக்கப்படும் இந்த மூதாட்டி தனது சுற்றுவட்டாரத்தில் நடக்கும் சுவாரசியமான கிசுகிசுக்கள் மற்றும் ரகசியங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் அருகில் வசிப்பவர்களிடம் தகவல்களை கேட்டு பெற்று அதனை ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொள்வாராம்

பின்னர் அந்த ரகசியம் யாருடையது என்று கண்டுபிடித்து அவர்களிடமே சென்று இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் கொடுங்கள் என மிரட்டி வந்துள்ளார் கிசுகிசுவின் தன்மைக்கு ஏற்ப பணத்தின் அளவும் மாறுமாம் குறிப்பாக கள்ளக்காதல் போன்ற விவகாரங்களுக்கு அதிக தொகையை வசூலித்திருக்கிறார்

இப்படி வசூலித்த பணத்தில்தான் அவர் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார் சிலர் ஒரு ரகசியத்தை மூடி மறைக்க 7 லட்சம் ரூபா வரை கூட கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது

இது தொடர்பாக அந்த மூதாட்டி சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டியும் அளித்துள்ளார் தான் எப்படி இந்த தொழிலை ஆரம்பித்தேன் எவ்வளவு சம்பாதித்தேன் என்பது குறித்து அவர் அந்த பேட்டியில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இந்த விசித்திர சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது பலரும் இதனை பார்து வியப்பும் கோபமும் கலந்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்



Post a Comment