அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள கிராண்ட் கேன்யன் தேசிய பூங்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 20 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29ம் திகதி கைபாப் பீடபூமியில் பெய்த தொடர் கனமழையால் பிரைட் ஏஞ்சல் கேன்யன் மற்றும் பேண்டம் ராஞ்ச் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கிராண்ட் கேன்யன் தேசிய பூங்காவில் வெள்ளம் சேறு சகதியுடன் கரைபுரண்டோடியது.
நேற்று காலை 60க்கும் மேற்பட்டோர் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார். மேலும், 20 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
