2026 உயர்தர பரீட்சை முடிவுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியீடு பரீட்சை ஆணையாளர் நாயகம் உறுதி

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் முடிவுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்

இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டார்

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை இன்று நாடு முழுவதும் உள்ள 2532 பரீட்சை மையங்களில் ஆரம்பமானது இது செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

இம்முறை 264496 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 107814 தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 372310 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்

பரீட்சை மண்டபங்களுக்குள் கைபேசிகள் ஸ்மார்ட் கடிகாரங்கள் மின்னணு சாதனங்கள் அல்லது குறிப்புகளை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது

மண்டபத்தினுள் பேசுதல் விடைத்தாள்களை பரிமாறிக்கொள்ளுதல் அல்லது இடையூறு விளைவித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் பரீட்சார்திகளுக்கு எதிராக பரீட்சை முடிவுகளை இடைநிறுத்துவது உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது

பரீட்சை கடமையிலுள்ள அதிகாரிகளில் மண்டப மேலதிகாரிகள் மற்றும் மேலதிக உதவி மேலதிகாரிகளுக்கு மட்டுமே கைபேசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது கடமையில் தவறும் ஊழியர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இதுவரை சீற்றமான காலநிலை அல்லது அவசர சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அசாதாரண சூழ்நிலைகள் உருவானால் உடனடியாக செயல்பட அனைத்து நிறுவனங்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்



Post a Comment