யாழ். நாரந்தனையில் 19 வயது இளைஞர் தூக்கில் பலி

 யாழ்ப்பாணம் நாரந்தனை தெற்கு பகுதியில் 19 வயது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் இன்று 07.08.2026 இடம்பெற்றுள்ளது.

தாயாரும் சகோதரியும் யாழ்பாணத்திலும், தந்தை நாரந்தனை வீட்டிலும் வசித்து வரும் நிலையில், குறித்த இளைஞர் இடையிடையே அந்த வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இன்று ஆடு பார்க சென்ற அயலவர் ஒருவர் இளைஞரை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.



Post a Comment