பெருமளவிலான கஞ்சாவை கெப் ரக வாகனத்தில் கடத்தி சென்ற தம்பதியினரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்
புத்தளம் சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள பத்துளுஓயா பொலிஸ் வீதி தடையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது
சோதனையின் போது குறித்த வாகனத்தில் இருந்து 17 கிலோ கிராம் 985 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்டவர்கள் இராஜாங்கனை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய கணவனும் 22 வயதுடைய அவரது மனைவியும் ஆவர்
கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை தனமல்வில பகுதியில் பயிரிடப்பட்டு கடத்தி வரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்
ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
