நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; மேலும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளனர்.
நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவல்படி, காணாமல் போன சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 34 பேர், மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 33 பேர் அடங்குவர். மேலும், நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் மாயமாகியுள்ளனர்.
இப் பகுதி ஆன்மீகப் பயணிகள் மற்றும் மலை ஏற்றம் (trekkers) செய்பவர்களிடையே மிகவும் பிரபலமானது.
திபெத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 265 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எல்லைக் கடக்கும் பகுதியில் நிலச்சரிவும் வெள்ளமும் கட்டடங்களைத் தாக்கும் பயங்கரக் காட்சிகள் CCTV-யில் பதிவாகியுள்ளன.
நேபாள காவல் துறையினர், இராணுவ வீரர்கள் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்: "என் குடும்பத்தினர் என் கண் முன்னேயே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்" என்று தப்பிப்பிழைத்த பெண் ஒருவர் கூறியுள்ளார். அவரும் அவரது மகனும் கூரையின் மீது ஏறி உயிர்தப்பியுள்ளனர்.
ஆரம்பத்தில் நிலநடுக்கம் காரணமாக வெள்ளம் ஏற்பட்டது என அதிகாரிகள் நினைத்தனர். ஆனால், "நிலச்சரிவு ஏற்பட்டதாலேயே நில அதிர்வு ஆற்றல் உருவாகியுள்ளது" என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
