மட்டக்குளிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும், 12 தோட்டாக்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் பேரில், நேற்று (19) இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரின் வீட்டை, விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சோதனையிட்ட போதே இந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும் 12 தோட்டாட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
