121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள்கட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 1905 ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்படவுள்ள இந்த சூரிய கிரகணம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஸ்பெயின், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்ச்சுகலின் ஒரு பகுதியில் காணக் கூடியதாக இருக்கும்.
முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும் சந்திரனால் சூரியன் முழுமையாக மறைக்கப்படுவதுடன், பகல் நேர வானம் மாலை வேளையைப் போன்று இருண்டு, காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் நடத்தைகளிலும் மாற்றங்கள் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலும், 2021 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவிலும், 2019 ஆம் ஆண்டில் சிலி நாட்டிலும் முழு சூரிய கிரகணங்கள் தென்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
