இன்றைய ராசி பலன் - 09.08.2026 ஞாயிறு | ஆடி 24 |

*இன்றைய கிரக நிலை*: மிதுன ராசியில் சந்திரன் - மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரம். விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் தொடர்கிறது. இன்று பிரதோஷம் என்பதால் சிவ வழிபாடு சிறப்பு.

 *மேஷம்*

பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். திடீர் பணவரவுக்கு வாய்பு. புதிய தொழில் ஒப்பந்தங்கள் கைகூடும். அவசர முடிவுகளை தவிர்து நிதானமாக செயல்படவும். மாலை ஆலய தரிசனம் நன்மை தரும்.

 *ரிஷபம்* 

குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். தேவையற்ற செலவுகள் குறையும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். சமூக பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டு.

 *மிதுனம்*

சந்திரன் உங்கள் ராசியில் இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். தந்தை, மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேகமாக வாகனம் ஓட்ட வேண்டாம். புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

 *கடகம்*

குரு பலத்தால் பணியில் சாதகமான மாற்றங்கள். வீட்டில் நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். இரவு நேரத்தில் உடல்நலத்தில் கவனம். அறப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

 *சிம்மம்*

அரசு மற்றும் அரசியல் துறையில் எதிர்பாராத வெற்றி. பிள்ளைகளால் பெருமை. போட்டி தேர்வில் நல்ல மதிப்பெண். செரிமான பிரச்சனை வரலாம். மாலை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

*கன்னி*

பணியில் வேகமாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீர்வு காணும். குடும்பத்தில் அமைதி நிலவும். கோபத்தை கட்டுப்படுத்தவும். அரசு வழி உதவிகள் கிடைக்கும். துணையுடன் அனுசரித்து செல்லவும்.

 *துலாம்*

கல்வியில் சிறந்த முன்னேற்றம். புதிய வருமான வழிகள் உருவாகும். பேச்சுத்திறனால் மரியாதை கூடும். பணிச்சுமை காரணமாக உடல் அசதி வரலாம். வாழ்கை துணையின் ஆதரவு பலம் தரும். பயணங்கள் பயனுள்ளதாக அமையும்.

 *விருச்சிகம்* ⚠️ _சந்திராஷ்டமம்_

முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். பேச்சில் நிதானம் அவசியம். நிதிநிலை சுமாராக இருக்கும். நிலுவை பணிகள் முடிய தாமதமாகும். காதல் விஷயத்தில் அனுசரித்து செல்லவும். வழிபாடு செய்து நாளை தொடங்கவும்.

*தனுசு*

வீட்டு உபயோக பொருட்களுக்கு செலவு அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களால் ஆதரவு. நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி. உங்களுக்கு எதிரான சதித்திட்டங்கள் முறியடிக்கப்படும். பண பரிவர்தனையில் கவனம்.

 *மகரம்*

தொழிலில் எதிர்பார்த லாபம் கிடைக்கும். நிதிநிலை வலுப்பெறும். புதிய வேலை/தொழில் வாய்ப்பு வரும். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். வாகன பராமரிப்பு செலவு வரலாம். ஆடம்பர செலவை தவிர்கவும்.

 *கும்பம்*

மனைவியின் உடல்நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவு ஏற்படலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தும் யோகம். சொத்து வாங்கும் முன் சட்ட ஆலோசனை பெறவும். மாலை மனக்கவலை நீங்கும்.

*மீனம்*

திருமண வாழ்கை மகிழ்சியாக இருக்கும். குடும்ப பொறுப்புகளில் துணையின் ஆதரவு கிடைக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம். மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். மாலை நடைப்பயிற்சி நல்லது.



Post a Comment