கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27) திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியின் பின்புற ஆசனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து முச்சக்கர வண்டி சாரதியின் அலட்சியத்தால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
