என்னையா படமெடுக்கிறாய்-முல்லைத்தீவில் கடுப்பாகி காட்டு யானை அடித்ததில் குடும்பஸ்தர் பலி

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் – மன்னகண்டல் நெல் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றை வீடியோ எடுக்கச் சென்றிருந்த நபர் ஒருவர், அதே யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம்  நேற்று(24.07.2026) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நபர் ஒருவர் வசந்தபுரம் – மன்னகண்டல் நெல் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றை வீடியோ எடுக்கச் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த அவர் முதலில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், மாலை 4.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கைவேலி, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பூபாலசிங்கம் கமலேஸ்வரன் (வயது 49) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment