குடும்ப பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; தப்பிச்சென்ற லொறி சாரதி

 

கொழும்பு - குருநாகல் வீதியில் நில்பானாகொட பகுதியில் மினுவாங்கொடையில் இருந்து திவுலப்பிட்டிய நோக்கிப் பயணித்த கொள்கலன் லொறி ஒன்று, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் பலத்த காயங்களுக்கு உட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தின் பின்னர் தப்பிச் சென்ற கொள்கலன் லொறி மற்றும் அதன் ஓட்டுநர் பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment