இந்தியாவின் பீகாரில் இருந்து வந்துள்ள வித்தியாசமான திருமண சம்பவம் இது.
ஒரு இரவு, “வீட்டில் யாரும் இல்லை” என்று கூறி, தனது காதலனை அன்புடன் வீட்டிற்கு வருமாறு அந்த இளம்பெண் அழைத்தார். நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் காதலியைச் சந்திக்க வந்த காதலனுக்கு, அங்கே அவருக்காக ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்பது தெரியாது!
காதலன் வீட்டிற்கு வந்ததும், அவருக்குத் தெரியாமல், அந்த இளம்பெண் தனது குடும்பத்தினருக்கும் ஊர்மக்களுக்கும் தகவல் தெரிவித்தார். அனைவரும் ஒன்றுகூடி, இருவரையும் அருகிலிருந்த கோவிலுக்கு அழைத்துச் சென்று உடனடியாக திருமணம் செய்து வைத்தனர்.
எதிர்காலத்தில் காதலன் தன்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிடக் கூடும் என்ற அச்சத்தால்தான் இளம்பெண் இப்படிப்பட்ட திட்டத்தை செயல்படுத்தியதாக கூறப்படுகிறது.
எப்படியோ, அவரது திட்டம் வெற்றியடைந்துவிட்டது.
இதனால் காதலனுக்கும் ஒரு வகையில் லாபம்தான். திருமணச் செலவும் இல்லை, ஆடம்பரமும் இல்லை; எளிமையான திருமணம், புதிய வாழ்க்கையின் தொடக்கம்.
