அதிரடி கைதான பெண் அரச உத்தியோகத்தர் ; விசாரணையில் வெளியான தகவல்

 

கொழும்பு நிலப் பதிவாளர் அலுவலகத்தின் பெண் நிலப் பதிவாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிலப் பதிவாளர் அலுவலகத்தின் ஆவணங்களை வெளித் தரப்பினருக்கு வழங்கியதற்காகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு காணிப் பதிவாளர் அலுவலகத்தின் காணிப் பதிவாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் சந்தேக நபர் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சந்தேகநபர் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதன் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், கொழும்பு நிலப் பதிவாளராகப் பணியாற்றிய காலத்தில், அந்த அலுவலகத்தின் ஆவணங்களை வெளித் தரப்பினருக்கு வழங்கியதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கு உடந்தையாக இருக்க சதி செய்ததாகவும், சட்டப்பூர்வ உரிமையாளர்களிடமிருந்து ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து, அந்த நிலங்களை அபகரித்ததாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பன்னிப்பிட்டிய, ருக்மலையைச் சேர்ந்த 51 வயதுடையவர் ஆவார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளன. 

Post a Comment