Posts

நீர் கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு


அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்று வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வருடத்தின் முதல் பாதியில், நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட சபைக்கு பெரியளவில் செலவுகள் எதுவும் ஏற்படவில்லை. இதன் காரணமாகவே இந்தக் கட்டண மாற்றமில்லா முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நீர்க் கட்டணங்கள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை மறுபரிசீலனை செய்யப்படுவது வழக்கம். 

ஆனால், நடப்பு ஆண்டின் முதல் பாதியில் தற்போதைய கட்டணங்களையே அப்படியே தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், இதற்கு அடுத்ததாக வரும் ஆறு மாத காலப்பகுதியிலும் நீர்க் கட்டணங்கள் மாற்றப்படாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அமைச்சர் சுசில் ரணசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment