காதல் விவகாரம் - கொழும்பில் இளைஞர் மீது சரமாரி கத்திக்குத்து

 கொழும்பு - கடவத்தை பகுதியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்கள் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு - கடவத்தை பகுதியினை சேர்ந்த 17 வயது இளைஞரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இதன்போது கழுத்தில் பலத்த கத்திக்குத்து காயத்துடன் இருந்த இளைஞரை அப்பகுதியிலிருந்த மக்கள் மீட்டு ராகம வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த இளைஞர், தனது வீட்டின் பின்புறம் உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளார்.

கத்திக்குத்து நடத்தியதாக சந்தேகப்படும் இளைஞரையும், அவருடன் வந்த மேலும் இரண்டு இளைஞர்களையும் கடவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், இந்த சம்பவம் காதல் விவகாரத்தினால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒரு இளைஞரின் தந்தை பொலிஸ் அதிகாரி என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், மூன்று சந்தேகநபர்களும் நேற்று (31) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Post a Comment