பிரதமர் அதிரடி தகவல்

 

நாட்டின் கல்வி செயல்பாட்டில் பன்முகத்தன்மையை அங்கீகரிக்க வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'சரசவி திரியோ அபிமன்' விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப விழா, நேற்று (11) அலரி மாளிகையில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வீதம் புலமைப்பரிசில் தொகையும் வழங்கி வைக்கப்பட்டது. 

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், எந்தவொரு பிள்ளையும் கல்வி முறையிலிருந்து விடுபடாமல், விசேட தேவையுடைய அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வியில் சம வாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கை என வலியுறுத்தினார். 

மேலும், பல்கலைக்கழகங்களுக்குள் இம்மாணவர்களுக்குத் தேவையான நடைமுறை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டிய விசேட பொறுப்பு, துணைவேந்தர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளுக்கு உண்டு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment