சற்று முன் அதிர்ந்தது டுபாய்

 

துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை மேற்கோள்காட்டி அவசரத் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த வெடிச்சத்தங்கள் துபாய் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

எனினும், வெடிச்சத்தங்களுக்கான துல்லியமான காரணம், உயிரிழப்புகள், காயமடைந்தோர் அல்லது சொத்துச் சேதம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் அதிகாரிகளும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தின் பின்னணி மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சம்பவம், அமெரிக்கா–ஈரான் மோதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிராந்திய பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், துபாயில் கேட்கப்பட்ட வெடிச்சத்தங்கள் எந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை

Post a Comment