வெளிநாட்டில் இருந்து திரும்பிய பெண் விபத்தில் பலி

வெளிநாட்டில் இருந்து திரும்பிய பெண் பிள்ளைகாளுடன் சென்றபோது விபத்திடசி சிக்கி உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் கபுத்தை பகுதியில் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர், தம்புள்ளை கபுவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான டி. எம். திலானி அரோஷா (46 வயது) ஆவார்.

விபத்தில் லொறிக்குக் கீழே சிக்கி, தாயும் இரு புதல்வர்களும் விபத்துக்குள்ளானதில் தாய் உயிரிழந்ததுடன், இரு புதல்வர்களும் காயமடைந்து தம்புள்ளை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தம்புள்ளை காவல்துறை தெரிவிக்கிறது.

அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரு புதல்வர்களும் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர். இதில் மூத்த மகன் தம்புள்ளை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தாய் குவைத் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்துவிட்டு, கடந்த 8ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர். பிள்ளைகாளுடன் நகருக்குச் செல்வதற்காக வீதியோரமாக நின்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி வந்த டிப்பர் லொறி மோதியதாக வசிப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Post a Comment