யாழில் பயணிகள் உயிர்களை காப்பாற்றி தனியார் பேருந்தின் சாரதி திடீர் என மரணம் அடைந்தமை தியரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று (22/07) காலை நயினாதீவு குறிகாட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளுடன் தனியார் பேருந்தை செலுத்திச் சென்றுகொண்டிருந்தது.
இதன்போது, மண்கும்பான் சந்திக்கு அருகில்சாரதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து , சாதுரியமாக செயற்பட்ட சாரதி பேரூந்தினை அந்த உயிர்ப்போராட்டத்தின் இறுதி நொடிகளிலும், தனது பொறுப்பை மறக்காமல், பயணிகள் எவருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதவாறு பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து நடத்துனரின் உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
