உச்சம் தொட்ட எரிபொருள் விலை

 

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.

அதன்படி ஆசிய சந்தையில் வர்த்தக நடவடிக்கையின் ஆரம்பத்தில் இன்று (20) மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 2.39% அதிகரித்து, தற்போது 84.46 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

இதற்கமைய, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 2.75 அமெரிக்க டொலர் அதிகரித்து 90.85 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. 

இதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 2.56 அமெரிக்க டொலர் அதிகரித்து 85.05 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மோதல்களால் எரிபொருள் விநியோகம் தடைபடக்கூடும் என்ற அபாயமே கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகின்றது.

மோதல்கள் தொடர்ந்து அதிகரித்தால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயரும் என்று உலகப் பொருளாதார வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, தொடர்ச்சியாக 9 ஆவது இரவாக ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

Post a Comment