மசாஜ் நிலையம் என்ற பெயரில் செயற்பட்ட சமூக பிறழ்வான விடுதி ஒன்று சீதுவையில் காவல்துறையால் சுற்றி வளைக்கபட்டுள்ளது.
சீதுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதி பகுதியில் இந்த மசாஜ் நிலையம் இயங்கி வந்துள்ளது.
காவல்துறையினரால் நேற்று (19.07.2026)முன்கெடுக்கபட்ட சோதனையின் போது ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் குறித்த சமூக பிறழ்வான விடுதியை நிர்வகித்து வந்த முகாமையாளர் (ஆண்) மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 4 பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஹதுந்தாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய முகாமையாளர் மற்றும் கொஸ்கம, மாத்தளை, குருநாகல் மற்றும் அம்பகமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 30 வயதிற்குட்பட்ட 4 பெண்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
