6 நாள்கள் இடிபாடுகளுக்குள் போராட்டம்; 3 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார்

 

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டு 6 நாள்களுக்குப் பின்னர், இடிபாடுகளுக்குள் இருந்து 3 வயது சிறுவன் ஒருவன் ஜோர்தான் மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி சிறுவன் லா குவைரா மாகாணத்தில் உள்ள இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டார் என பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கரகஸில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில அதிர்வு ஏற்பட்டு 3 நாள்களுக்குப் பிறகு இடிபாடுகளில் மக்கள் உயிருடன் இருப்பது அரிது என்ற நிலையில், 6 நாள்களின் பின் இந்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,943 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் 10,000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளமையுடன், பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Post a Comment