அலி கமேனியின் இறுதி சடங்கில் அவரது 3 மகன்கள் பங்கேற்னர்

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு பிரார்த்தனை தலைநகர் டெஹ்ரானில் நேற்று  நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

கமேனியின் மகன்களான முஸ்தபா, மீசம் மற்றும் மசூத் கமேனி ஆகியோர் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் புரட்சிகர பாதுகாப்புப் படை (ஐ.ஆர்.ஜி.சி) தளபதி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இருப்பினும், கடந்த மார்ச் மாதம் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற கமேனியின் மற்றொரு மகனான அயத்துல்லா மோஜ்தபா கமேனி இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. இது அவர் எங்கு, எப்படி உள்ளார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

புதிய உச்ச தலைவர் அயத்துல்லா மோஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து ஈரான் அரசுத் தரப்பில், “அவருக்குப் பெரிய அளவிலான முகச்சிதைவோ அல்லது உறுப்பு இழப்போ ஏற்படவில்லை, அவர் நலமாக உள்ளார்” என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், அவர் தொடர்ந்து மக்கள் பார்வையில் படாமல் இருப்பது ஈரான் மக்களிடையே பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

Post a Comment