மோட்டார் சைக்கிளும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துயரமான விபத்து நேற்று (05.7.2026) மாலை 6.45 மணியளவில் குருநாகல் மாவட்டம் நாரம்மல - வாரியபொல வீதியில் சியம்பலாகஸ் கொட்டுவ மதீனா தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பாடசாலைக்கு அருகில் வைத்து ஓட்டோவுடன் பயங்கரமாக மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 19 வயதுடைய இளைஞர், உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக ஓட்டோவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
