தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் மேலும் 19 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.உயிரிழந்தவர்களில் நான்கு பேர் பிரித்தானிய பிரஜைகள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மின் கம்பம் ஒன்று சாய்ந்து விழுந்ததே இந்த தீ விபத்துக்கான காரணம் என குறிப்பிடப்படுகின்றது.
அல்மேரியாவில் உள்ள லொஸ் கலர்டோஸ் சுற்றியுள்ள காடுகளுக்குள் இந்தத் தீ வேகமாகப் பரவி வருகின்றது.
இந்த கோடைகாலத்தில் தெற்கு ஐரோப்பா முழுவதும் சுமார் 40 செல்லியஸ் வரை வெப்ப அலை நீடிப்பதால் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ், போர்த்துகல் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வௌியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
