ராகு நட்சத்திர பெயர்ச்சி ; பண விஷயத்துல கவனமா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

 

ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறார். இந்த ராகு மற்ற கிரகங்களை போல் நேர்கதியில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ரகதியில் பயணிப்பார். மேலும் இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதுமட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்

இந்த ராகு ஜூன் 30 ஆம் திகதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். ராகுவின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக நிதி விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இப்போது ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். 

ரிஷபம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் பல சிரமங்களை சந்திப்பார்கள். செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். சிலருக்கு பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பள்ளது. வேலை மற்றும் தொழிலில் பல தடைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக மன அமைதி பாழாகும். மனம் ஒருவித குழப்பத்துடனேயே இருக்கும். எந்த ஒரு செயலை செய்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் பலவிதமான சவால்களை சந்திப்பார்கள். பெற்றோருடனான உறவில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தடை ஏற்படலாம். பணத்தை சேமிக்க வைக்க முடியாமல் போகும். வாழ்வில் சிரமங்கள் அதிகரிக்கும். மனதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தால், மோசமான விளைவுகளை தவிர்க்கலாம்.

சிம்மம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் பேச்சிலும், நடத்தையிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிதாக தொடங்கிய வேலையில் தாமதம் ஏற்படலாம். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரால் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எந்த ஒரு முக்கியமான நிதி முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்

விருச்சிகம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் மிகுந்த மன குழப்பத்திற்கு ஆளாகக்கூடும். அதிகரித்த மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக தினசரி செயல்பாடுகளை கூட செய்ய முடியாமல் அவதிப்படலாம். சிலருக்கு நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை குறைவாக பேசுவதோடு, அமைதியாக இருக்க வேண்டும்.



Post a Comment