மாத்தறை திக்வெல பகுதியில் பணக் கொடுக்கல்–வாங்கல் தொடர்பான தகராறு காரணமாக தம்பி ஒருவர் அவரது அண்ணனால் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 41 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையான நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலின்படி, மதுபோதையில் இருந்த 45 வயதுடைய அண்ணன், தம்பியின் வீட்டுக்குள் கூரிய ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்துள்ளார்
இதையடுத்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பாக மாறியுள்ளது.
அதன்போது, சந்தேகநபர் தனது தம்பியை கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து, நான்கு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய சந்தேகநபரான அண்ணனை காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து மாத்தறை திக்வெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
