சுக்கிர பெயர்ச்சி-இன்றைய ராசி பலன்{9.6.2026}

 

இன்று 09 ஜூன் 2026 வைகாசி மாதம் 26ம் தேதி செவ்வாய்க் கிழமை, மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று செவ்வாய் பகவானின் அருளும், கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி நன்மை தரும். இன்று சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று முருகன் வழிபாடு செய்ய வேண்டிய தினம்.

மேஷம் ராசி பலன்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய காரியம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். இன்று உங்களால் முடிந்த சில தான தர்மங்களை செய்வது நல்லது. சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று அனைவரையும் மதித்து செயல்படுவதும், இனிய வார்த்தைகளை பேசுவதும் நல்லது. இல்லை எனில் உங்கள் நற்பண்புக்கே ஆபத்து நேரிடலாம்.இன்று உங்கள் நிதி ஆதாயத்திற்கு சிறந்த நாளாக இருக்கும். பணியிடத்திலும் உங்கள் மேல் அதிகாரிகள் உங்கள் மீது அதிக எதிர்பார்ப்புகளுடன் இருப்பார்கள்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று கூடுதல் பணிச்சுமையை நீங்கள் ஏற்க வேண்டியிருக்கும். நீங்கள் பணியில் இருப்பவர் என்றால், வேலை தொடர்பான சரியான திட்டமிடல் தேவை. உங்களுக்குப் புதிய பணிகள் ஒதுக்கப்படலாம். வீட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை, பொறுப்புகள் அதிகரிக்கலாம். மூத்தவர்களின் நல்லதொரு ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும். வேலை தொடர்பாக சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். செவ்வாயின் தாக்கம் உங்களுடைய பணிகளை செய்து முடிக்க தைரியம் அதிகரிக்கும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு குடும்ப பொறுப்புகள், வேலை அல்லது தொழில் தொடர்பாக பொறுப்பான பணி ஒன்று வழங்கப்படும். இன்று நீங்கள் எதிர்பாராத விதமாக ஒரு அன்புக்குரியவரைச் சந்திக்க நேரிடலாம்; அவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டிய சூழல் ஏற்படலாம். இன்று உங்களுடைய சூழல் சற்று சிரமங்கள் இருந்தாலும், மனதளவில் சோர்ந்துவிடாதீர்கள். ஆடம்பரம் பொருட்களை வாங்குவது போன்ற தேவையற்ற செலவுகளை தவிர இருப்பது. இன்று உங்களுடைய தலைமைத்துவம் அதிகரிக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சில சமயங்களில், திடீர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நீங்கள் தீவிரமான தவறுகளைச் செய்துவிடக்கூடும். இன்று யாரிடமும் கோபப்படுவது, தரமற்ற விதத்தில் பேசுவதை தவிர்க்கவும். இது உங்கள் மீதான மதிப்பை குறைக்கும். மேலும் எதிர்காலத்தில் உங்களுக்கு பிரச்சினையாக மாறலாம். நன்றி சிந்தித்து மற்றவர்களுக்கு நன்மை செய்யும் விதத்தில் நடந்து கொள்ளவும். நிதானத்திற்கு சிறப்பானதாக இருக்கும். அதே சமயம் நீங்கள் முடிவு எடுக்கும் விஷயத்தில் பலமுறை சிந்தித்து செயல்படுவது அவசியம்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களைச் சுற்றியுள்ள சூழலை நீங்கள் கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும். உங்கள் குடும்பம் விவகாரமாக இருந்தாலும், பணியிடமாக இருந்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் எதிரியோ அல்லது தொழில் போட்டியாளரோ உங்கள் செயல்பாடுகளை தடுக்க முயற்சிக்கலாம். எனவே எதிலும் கவனமாக இருக்கவும். இன்று நீங்கள் குழுவாக சேர்ந்து வேலை செய்வது உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். வேலை மாற நினைப்பவர்கள் முடிவு எடுப்பதற்கு முன் கவனமாக சிந்தித்து செயல்படவும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று யாரேனும் உங்களுக்கு ஒரு காதல் முன்மொழிவை அளித்தால், அது தொடர்பான முடிவு எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். உங்கள் நிலையைச் சரிபார்த்த பின்னரே பதிலளியுங்கள். இன்று உங்களுடைய பணிச்சூழலிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது இருக்கும்; எனவே சக ஊழியர்களுடன் இணைந்து உங்கள் பணிகளை மேம்படுத்துங்கள். இன்று எந்தவித பெரிய நிதி முடிவுகளை எடுப்பது, யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்க்கவும். வணிகம் தொடர்பாக புதிய வாடிக்கையாளர்களை பெறுவீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். இன்று குடும்ப வாழ்க்கையை பற்றி முக்கிய முடிவுகளை எடுப்பதில் மூத்தவர்களின் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். வணிகம் தொடர்பாக எதிர்பார்த்த உழைப்பு தேவைப்படும். நீண்ட காலம் பலன் தரக்கூடிய விஷயங்களில் முதலீடு நல்லது பொருட்களை வாங்கவும். உங்களுடைய வருமானம் அதிகரிக்கும் புதிய வழிகளை கண்டறிவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த துணையிடம் சேர்ந்து விவாதிப்பது நல்லது.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் புதிய வேலையைத் தேடினாலோ அல்லது புதிய தொழிலைத் தொடங்கினாலோ, உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். எதைச் செய்ய வேண்டுமானாலும், அதைச் சரியான நேரத்தில் செய்யுங்கள். இன்று மார்க்கெட்டிங் துரை, கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். அதே சமயம் பணி சுமை நிறைந்ததாகவும் இருக்கும். உங்களுடைய வேலை நிலை தன்மையை பேணுவது மிகவும் முக்கியம்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பணி சுமை நிறைந்த நாளாக இருக்கும். அதனால் பணிகளை முடிப்பதில் நீங்கள் சற்று அவசரத்தை உணரலாம். இன்று உங்களுடைய சோம்பேறிதனத்தை விடுத்து புத்துணர்ச்சியுடன் செயல்படவும். இல்லையெனில், முக்கியமான பணிகள் அனைத்தும் மேலும் தாமதமாகலாம். எனவே, நேரத்தை வீணடிக்காமல் உங்கள் பணிகளைச் செய்யுங்கள். இன்று பேச்சு வார்த்தைகளில் எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும். உங்களுடைய வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகளை கண்டறியவும்.சில நல்ல ஆலோசகர்களின் ஆலோசனை கிடைக்கும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பழைய திட்டங்கள் அல்லது உறுதிமொழி ஒன்றை நிறைவேற்றுவதற்கான நாளாக அமையும். இன்று வழிபாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த வாய்ப்பு உண்டு. நீங்கள் முயற்சிக்க நினைக்கும் எந்த ஊரு விஷயத்தையும் தள்ளிப்பட வேண்டாம். எதுவும் உங்களுக்கு கிடைக்கும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் உங்களுடைய புதிய யோசனைகள் பெரிதும் பாராட்டப்படும். உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட காலத்திற்குப் பின்னர், உங்கள் அன்றாட வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவுள்ளது. இன்று மார்க்கெட்டிங், தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். உங்களுக்குப் புதிய பதவி அல்லது பொறுப்பு கிடைக்கலாம். அதை ஏற்றுக்கொள்வதில் தாமதம் செய்யாதீர்கள்; இது உங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்பை உருவாக்கலாம். எந்த ஒரு ஒப்பந்தங்களைப் பெறுவதில் கவனம் தேவை. அது நீங்கள் நீண்ட காலத்திற்கு பயனடைவீர்கள்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு நிகழ்ச்சி அல்லது கூட்டத்தில் பங்கேற்பதற்காக நீங்கள் சிறப்பாகத் தயாராக வேண்டியிருக்கலாம். தேவையற்ற ஆடம்பரத்தைத் தவிர்க்கவும்; பகட்டைக் காட்டுபவர்களுடன் போட்டியிட வேண்டாம். அதே வேளையில், நீங்கள் சிலரின் கவனத்தை ஈர்க்கவும் கூடும். அலுவலகத்தில் உங்கள் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதை எதிர்பார்க்கலாம். உங்கள் வேலையை நிர்வகிக்க உதவும். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு இது ஒரு சிறந்த நாள்.


Post a Comment