கிளிநொச்சியை உலுக்கிய சோகம்-23 வயது இளைஞன் உயிரிழப்பு

 

மின்சாரம் தாக்கி 23 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று காலை தொழில் புரிந்து கொண்டிருந்த நிலையில் இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் சாரங்கன் என்ற இளைஞனே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் .

Post a Comment