நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
எப்பாவல, கெலேஅமுணுகொலய பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், ஹுரிகஸ்வெவ பகுதியிலும் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தனமல்வில - ஹம்பேகமுவ பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு காட்டு யானைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
.jpeg)